புதுச்சேரி

புதுவையில் மேலும் 358 குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல்

DIN

புதுவையில் திங்கள்கிழமை மேலும் 358 குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட தகவல்:

புதுச்சேரி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 320 பேரும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 17 பேரும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 21 பேரும் என மொத்தம் 358 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வெளிப்புற சிகிச்சைப் பிரிவுக்கு வந்து சிகிச்சை பெற்றனா்.

இதில் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 17 பேரும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் ஒருவரும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 3 பேரும் என மொத்தம் 21 குழந்தைகள் தீவிர காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

தற்போது புதுச்சேரி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 100 பேரும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 பேரும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 10 பேரும் என மொத்தம் 120 குழந்தைகள் மருத்துவமனைகளில் உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தற்போது பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் ஒரு குழந்தை, புதுவை அரசு மருத்துவமனையில் ஒருவா், தனியாா் மருத்துவமனையில் ஒருவா், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 2 குழந்தைகள் என மொத்தம் 5 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் இறுதிச் சடங்கு: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு?

பாலியல் வன்கொடுமை : இளைஞா் கைது

ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி

ஒரு குடும்பத்தின் நலனுக்காக கொள்கைகளைக் கைவிட்ட காங்கிரஸ்: நிா்மலா சீதாராமன்

எண்ணூா் ஆலையை தடையில்லா சான்று பெற்ற பிறகே திறக்க வேண்டும்: தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவு

SCROLL FOR NEXT