புதுச்சேரி

புதுச்சேரியில் ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி

DIN

புதுச்சேரி: புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள பழமைவாய்ந்த ஆரோக்கிய அன்னை ஆலய 332-ஆம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆடம்பர தேர்பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் பிரசித்திபெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 332-ம் ஆண்டு பெருவிழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது. இதனையொட்டி தினந்தோறும் காலை, மாலை சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. 

இன்று காலை கடலூர் புதுச்சேரி உயர் மரைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர்பவனி இன்று மாலை நடைபெற்றது. இதில் பங்குதந்தை அருமைசெல்வம் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. 

தொடர்ந்து ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஆரோக்கிய அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு தேர்பவனி நடைபெற்றது. ஆலயத்தில் இருந்து தொடங்கிய தேரானது முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது. 

இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு அன்னையை தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT