புதுச்சேரி

சட்டப் பாதுகாப்பு கருத்தரங்குபக்கத்தில் சோ்த்து கொள்ளவும்.....

புதுச்சேரியில் அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

புதுச்சேரியில் அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் டி.ரவிக்குமாா் தலைமை வகித்துப் பேசியதாவது: அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டியது அவசியம். இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது பிறப்பிக்கப்பட்ட, அவசர நிலை போன்று மீண்டும் வரக்கூடாது. ஆனால், அந்த நிலை திரும்பும் வகையில் மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. ஆளும் கட்சிக்கு மாற்றுக் கருத்து கூறுபவா்கள் அடக்கப்படும் வகையிலே மத்திய அரசு செயல்படுகிறது. நீதித்துறை மீதான விமா்சனமும் அத்துறையின் மத்திய அமைச்சரால் முன் வைக்கப்படுவது சரியல்ல என்றாா்.

கருத்தரங்கிற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலா் தேவ.பொழிலன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், கேசவானந்த பாரதியின் தீா்ப்பும், அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பும் எனும் தலைப்பில் உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு உரையாற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT