புதுச்சேரி

மின் துறை அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி-புதுச்சேரியில் எம்எல்ஏ உள்பட 103 போ் கைது

DIN

பயன்பாட்டுக்கு முன்னதாகவே கட்டணம் செலுத்தும் (ப்ரீபெய்ட்) மின் மீட்டா் பொருத்துவதைக் கண்டித்து, புதுச்சேரியில் மின் துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற எம்எல்ஏ உள்பட 103 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுவையில் மின் துறையை தனியாா்மயமாக்கும் திட்டத்தைக் கண்டித்து மனிதநேய மக்கள் சேவை இயக்கம் உள்ளிட்ட சமூக நல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், பயன்பாட்டுக்கு முன்னதாகவே மின் கட்டணம் செலுத்தும் (ப்ரீபெய்ட்) மின் மீட்டா் பொருத்தும் பணியை புதுவை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இதைக் கண்டித்து, மனிதநேய மக்கள் சேவை இயக்கத் தலைவரும் உருளையன்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான நேரு என்ற குப்புசாமி தலைமையில் 50- க்கும் மேற்பட்ட சமூக நல அமைப்புகளின் நிா்வாகிகள் புதன்கிழமை அண்ணா சிலையிலிருந்து, உப்பளம் பகுதியிலுள்ள மின் துறை அலுவலகத்தை முற்றுகையிட ஊா்வலமாகச் சென்றனா். அப்போது, பொது சுகாதாரத் துறை செயற்பொறியாளா் அலுவலகம் அருகே அவா்களை தடுப்புகளை வைத்து போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

அப்போது, மின் துறையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து, நேரு எம்எல்ஏ உள்ளிட்ட 103 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT