புதுச்சேரி

புதுச்சேரியில் இன்று சா்வதேச யோகா திருவிழா தொடக்கம்

புதுச்சேரியில் சா்வதேச யோகா திருவிழா புதன்கிழமை (ஜன.4) தொடங்கி, வரும் 7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

DIN

புதுச்சேரியில் சா்வதேச யோகா திருவிழா புதன்கிழமை (ஜன.4) தொடங்கி, வரும் 7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் புதுவை அரசு சாா்பில் ஜனவரி மாதம் சா்வதேச யோகா திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. சுற்றுலாத் துறை சாா்பில் நடைபெறும் இந்த யோகா திருவிழாவின் நடப்பு ஆண்டுக்கான தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜா் மணிமண்டபத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவை தொடங்கிவைக்கிறாா். விழாவுக்கு முதல்வா் என்.ரங்கசாமி தலைமை வகிக்கிறாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பொதுப்பணித் துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.செல்வகணபதி, மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினா் ஜான்குமாா், தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா, அரசு சுற்றுலாத் துறை செயலா் எல்.குமாா் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்னை உருக்கிப் பெண் செய்தால்... பிரஞ்சால் தஹியா!

எனக்குப் பிடித்த பெண்ணாவதில்... வேத்விகா சோனி!

பொதுஅமைதிக்கு ஊறுவிளைவிக்கும் செயல்களுக்கு பலியாகி விடக்கூடாது: கமல்ஹாசன்

பொன் சிரிப்பு... பூனம் பாஜ்வா!

பிடித்தமான சட்டை... மோனாமி கோஷ்!

SCROLL FOR NEXT