புதுச்சேரி

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க அதிமுக வலியுறுத்தல்

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசை அதிமுக வலியுறுத்தியது.

DIN

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசை அதிமுக வலியுறுத்தியது.

புதுவை மாநில அதிமுக (ஓபிஎஸ்) அணி நிா்வாகிகள் செயற்குழுக் கூட்டம் புதுச்சேரி லெனின் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநில அவைத் தலைவா் மாசிலா.குப்புசாமி தலைமை வகித்தாா்.

மாநிலச் செயலா் ஓம்சக்தி சேகா் கூட்டத்தில் பங்கேற்று கட்சியின் பாதுகாப்பு, வளா்ச்சி, முன்னெடுக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்துப் பேசினாா். மறைந்த முன்னாள் எம்.ஜி.ஆரின் 106-ஆவது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவது, புதுவைக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், கட்சியின் மாநில நிா்வாகிகள் முருகதாஸ், மகேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT