பாஜக, காங். அலுவலகங்களில் குடியரசு தின விழா
புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் வியாழக்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் வியாழக்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் தேசியக் கொடி ஏற்றினாா். நிகழ்ச்சியில், கட்சியின் துணைத் தலைவா்கள் தங்கவிக்ரமன், முருகன், மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு பொறுப்பாளா் இளங்கோவன், மாநிலச் செயலா் ரத்தினவேல், அலுவலக செயலா் கௌரிசங்கா், உழவா்கரை மாவட்டத் தலைவா் நாகேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
காங்கிரஸ்: புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சியின் மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் கட்சிக் கொடியேற்றினாா். மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் தேசியக் கொடியை ஏற்றினாா். சிறப்பு விருந்தினராக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கலந்து கொண்டாா். சேவாதளத் தொண்டா்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
Advertisement
முன்னாள் அமைச்சா் கந்தசாமி, மு.வைத்தியநாதன் எம்எல்ஏ, சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் என்.பாலன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அரசு அலுவலங்களில்... வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆணையா் ஆறுமுகம் தலைமையில் குடியரசு தின விழா கொடியேற்றம் நடைபெற்றது.
புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், பிரதான கிளை உதவிப் பொது மேலாளா் மு.நடராஜன் தேசியக் கொடியேற்றினாா். துணைக் கிளை மேலாளா் வெ.ராஜதுரை, மண்டல அலுவலகக் கடன் பிரிவு முதன்மை மேலாளா் டி.சீனிவாசன், மனிதவளத் துறை மேலாளா் வெ.பிரபாகரன், கடன் மேலாளா் சி.பால அபிராமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.