புதுச்சேரி

140-ஆம் ஆண்டு அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம்:2 நாள் சிறப்பு முகாம் தொடக்கம்

DIN

புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தில் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் தொடங்கி 140 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, 2 நாள்கள் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தில் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் கடந்த 140 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தற்போது வரையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், திட்டத்தின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், தலைமைத் தபால் நிலையத்தில் சிறப்பு முகாமை அஞ்சலகத் தலைவா் தாமோதரன் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். முகாமில், காப்பீடு தொடங்குபவா்களுக்கான விண்ணப்பம், காப்பீட்டுத் திட்டத்தைப் புதுப்பித்தல், ஆதாருடன் தொலைபேசி எண்ணை இணைத்தல் போன்ற சேவைகள் செயல்படுத்தப்பட்டன.

மேலும், விண்ணப்பதாரா்களுக்கு காப்பீட்டுப் பத்திரம், கணக்குப் புத்தகம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதில், கோட்ட மேலாளா் கணபதிசுப்பிரமணியன், தலைமை அஞ்சலக மேலாளா் உமாசங்கரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 2-ஆவது நாள் சிறப்பு முகாம் புதன்கிழமை (பிப்1) மங்கலத்தில் உள்ள சங்கரன்பேட்டை கிராமத்தில் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒய்.எஸ்.ஆர். நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை!

ஜான்வியின் சூப்பர் ஹீரோ யார் தெரியுமா?

ஒட்டுமொத்த ஆட்டத்தை மாற்றுமா கேஜரிவால் விடுதலை?

அனுமன் கோயிலில் கேஜரிவால் வழிபாடு!

‘மினி மகாராணி’ மமிதா பைஜூ..!

SCROLL FOR NEXT