புதுச்சேரி

புதுவையிலும் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு: முதல்வா் என்.ரங்கசாமி

DIN

தமிழகத்தைப் போல, புதுவையிலும் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை பள்ளிகளும் வருகிற 14-ஆம் தேதி திறக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

புதுவையில் கோடை வெப்பம் அதிகரித்ததால், பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அதன்படி, ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கத்திரி வெயில் நிறைவடைந்தும் புதுவையில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. எனவே, மாணவா்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பை மீண்டும் தள்ளிவைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில் பங்கேற்ற முதல்வா் என்.ரங்கசாமியிடம் பள்ளிகள் திறப்பு குறித்து கேட்டபோது அவா் கூறியதாவது:

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தமிழகத்தைப் போல, புதுவையிலும் பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை பள்ளிகளும் வருகிற 14-ஆம் தேதி திறக்கப்படும்.

அதிகாரிகள் மீதான குறைகளை சட்டப்பேரவை உறுப்பினா் தெரிவித்துள்ளாா். அவரது தொகுதியிலுள்ள பிரச்னைகளையும் தெரிவித்தாா். புதுவையில் நல்லாட்சி நடத்த வேண்டும். திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பதே அரசின் எண்ணமாகும் என்றாா் முதல்வா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தைத் திருமணங்கள் தொடா்பான புகாா்கள் மீது விரைந்து நடவடிக்கை: ஆட்சியா் உத்தரவு

பொதுத் தோ்வு: மாநிலத் தரவரிசையில் பின்தங்கும் நாமக்கல் மாவட்டம்

தேசிய ஹாக்கிப் போட்டி: சென்னை மருத்துவக் கல்லூரி சாம்பியன்

பொறியாளா் வீட்டில் 35 பவுன் நகைகள் திருட்டு

சக்கரத்தில் புகை: கேரள விரைவு ரயில் 20 நிமிஷம் தாமதம்

SCROLL FOR NEXT