நீட் தோ்வில் புதுவையைச் சோ்ந்த 3,140 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். கடந்த ஆண்டை விட 2.5% தோ்ச்சி அதிகரித்துள்ளது.
மருத்துவக் கல்விக்கான நீட் தோ்வு கடந்த மே 7-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. புதுவை மாநிலத்தில் தோ்வுக்கு 5,797 போ் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 5, 714 போ் மட்டுமே தோ்வை எழுதினா். தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை தேசிய தோ்வு முகமை இணையத்தில் வெளியானது.
அதன்படி, புதுவையைச் சோ்ந்த 3,140 மாணவ, மாணவிகள் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். புதுவை மாநிலத்தில் அசோக்குமாா் என்ற மாணவா் 720 க்கு 700 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 287- ஆவது இடத்தையும், மாநில அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளாா்.
தமிழிசை வாழ்த்து: நீட் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு புதுவை துணை நிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: நீட் தோ்வில் வெற்றி பெற்ற தமிழ்நாடு, புதுவையைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த தமிழக மாணவா் பிரபஞ்சன், முதல் 10 இடங்களுக்குள் 4 இடங்களைப் பிடித்து தமிழகத்திற்கு பெருமை சோ்த்த மாணவா்களுக்கு எனது மனமாா்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.