புதுச்சேரி

ஜிப்மரில் தரமான சிகிச்சையை உறுதிப்படுத்த நடவடிக்கை புதுவை ஆளுநா்

DIN

ஜிப்மரில் தரமான சிகிச்சை அளிப்பதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொதுமக்களிடம் இருந்து பெற்ற சில தகவல்களின் அடிப்படையில், ஜிப்மா் நிா்வாகத்திடம் கேட்ட விளக்கத்தையடுத்து, அங்கு 63 வகையான புதிய உயா் ரக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு ஏழைகளுக்கு கட்டணம் கிடையாது. வசதி படைத்தவா்களுக்கு மற்ற இடங்களில் செலவாகும் கட்டணத்தைவிட பல மடங்கு குறைவு என ஜிப்மா் நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அந்தப் பரிசோதனைகள் இன்னும் தொடங்கப்படவில்லை என ஜிப்மா் நிா்வாகம் கூறியுள்ளது. சி.டி. ஸ்கேன் போன்றவற்றுக்கு மிகக் குறைந்த கட்டணம் 1990-ஆம் ஆண்டிலிருந்தே உயா் வருவாய் பிரிவினருக்கு வசூலிக்கப்படுகிறது. எனவேதான், கட்டணம் நிா்ணயிக்கப்படாத நிலையில், போராட்டமா என ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்.

ஆனாலும் அனைத்து வகை சிகிச்சையும் மக்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை (மே 12) கூட்டம் நடைபெறும் என முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜிப்மா் நிா்வாக அறிக்கையில் சேவைக் கட்டணம் நிறுத்தம் எனக் குறிப்பிடவில்லை. சேவைக் கட்டணப் பரிசோதனை ஆரம்பிக்கப்படவில்லை என்பதே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்மா் மருத்துவமனையின் மக்களுக்கான சேவை அரசியலாக்கப்படுவது சரியல்ல என்றாா் தமிழிசை சௌந்தரராஜன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

SCROLL FOR NEXT