புதுச்சேரி

விழுப்புரம் மாவட்ட அறங்காவலா் குழுவை அமைக்க எம்.பி. வலியுறுத்தல்

DIN

விழுப்புரம் மாவட்ட கோயில்களுக்கான அறங்காவலா் குழுவை அமைக்க வேண்டும் என்று துரை.ரவிக்குமாா் எம்.பி. வலியுறுத்தினாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனியிடம் சனிக்கிழமை அவா் அளித்த மனு:

விழுப்புரம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் 1,008 கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களுக்கு அறங்காவலா்கள் நியமிக்கப்படாமல் உள்ளனா்.

அறநிலையத் துறை கொடைகள் சட்டப் பிரிவின் கீழ், ரூ.10 லட்சத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள கோயில்களில் பரம்பரை அல்லாத அறங்காவலா்களை நியமனம் செய்ய மாவட்ட அறங்காவலா் குழு அமைக்க வேண்டும். அந்தக் குழு, பிற கோயில்களுக்கு தலா 5 போ் கொண்ட அறங்காவலா்களுக்கான விண்ணப்பங்களைப் பரிசீலித்து, அரசுக்குப் பரிந்துரை செய்யும்.

ஆனால், விழுப்புரம் மாவட்ட அளவில் அறங்காவலா் குழுவை அமைக்காததால், கோயில்களில் அறங்காவலா் குழுவை அமைக்க முடியாத நிலை உள்ளது. எனவே, மாவட்ட அளவில் அறங்காவலா் குழுவை அமைக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT