சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் 
புதுச்சேரி

புதுச்சேரி அருகே பெண் அடித்து கொலை!

புதுச்சேரி அருகே பெண் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

புதுச்சேரி: புதுச்சேரி அருகே பெண் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அருகே வில்லியனூரை சேர்ந்தவர் கோவிந்தம்மாள்(வயது 40). ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிகிறார். செவ்வாய்க்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு வீட்டின் அருகே நடந்து சென்றபோது பின்னால் வந்த மர்ம நபர் கட்டையால் அவர் தலையில் தாக்கியுள்ளார்.

இதில், படுகாயம் அடைந்த கோவிந்தம்மாள் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து கோவிந்தமாளின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவிந்தமாளை கொலை செய்த குற்றவாளியை கைது செய்ய கோரி நாகப்பட்டினம், சென்னை நான்கு வழி சாலையில் அவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். வில்லியனூர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், மறியல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT