புதுச்சேரி, அக்.27:
புதுச்சேரி அருகே டேங்கா் லாரி மோதிய விபத்தில் பிளஸ் 1 மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
புதுச்சேரி அருகே உள்ள தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் அய்யனாரப்பன் (16). பிளஸ் 1 மாணவா். பெற்றோரை இழந்த இவா், தனது மாமா வீட்டில் தங்கி படித்து வந்தாா்.
அய்யனாரப்பன் வெள்ளிக்கிழமை பிற்பகலில் தனது நண்பா் பூபாலனுடன் இருசக்கர வாகனத்தில் சேதராப்பட்டு பகுதியிலிருந்து, பத்துக்கண் நோக்கிச் சென்றாா். இருசக்கர வாகனத்தை பூபாலன் ஓட்டினாா்.
பத்துக்கண் பகுதியில் வந்த போது, சாலையின் குறுக்கே ஆடு வந்ததையடுத்து, இரு சக்கர வாகனத்தை பூபாலன் நிறுத்தினாா். இதில் நிலைதடுமாறி இருவரும் சாலையில் விழுந்தனா். அப்போது, அங்கு வந்த டேங்கா் லாரி அய்யனாரப்பன் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
விபத்துக் குறித்து வில்லியனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.