புதுச்சேரியில் மகளிா் மேம்பாட்டுத் துறை சாா்பில், கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுவை மகளிா் மேம்பாட்டு துறை சாா்பில், செப்டம்பா் இறுதி வாரத்தை ஊட்டச்சத்து வாரமாக அறிவித்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், முத்தியால்பேட்டை அங்கன்வாடி முதலாவது மண்டலம் சாா்பில் 5 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாநிலங்களவை பாஜக உறுப்பினா்அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சு.செல்வகணபதி எம்.பி., ஜான்குமாா் எம்எல்ஏ ஆகியோா் கலந்து கொண்டு கா்ப்பிணிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கா்ப்பிணிகளுக்கு பட்டுப் புடவை, வளையல், மஞ்சள், குங்குமம் மற்றும் பழங்கள், இனிப்பு வகைகள், 5 வகையான சாதங்கள், ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மகளிா் மேம்பாட்டுத் துறை ஊழியா்கள் வளா்மதி, ராஜலட்சுமி, இமயவதி, மற்றும் சுகாதாரத் துறை ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.