பிரதமா் நரேந்திர மோடியின் அண்ணன் சோமாபாய் மோடி புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.
சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை வந்த அவா் புதுவை சட்டப்பேரவை வளாகத்துக்குச் சென்றாா். அங்கு அவரை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமி நாராயணன் ஆகியோா் வரவேற்றனா். அவா் முதல்வா் என்.ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினாா்.
பின்னா், புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் தங்கிய அவா், மாலையில் அரவிந்தா் ஆசிரமம் மற்றும் கோயில்களுக்குச் சென்ாக பாஜகவினா் தெரிவித்தனா்.