முகப்பு
புதுச்சேரி

ஆசிரியா் கொலை வழக்கு: ஆட்டோ ஓட்டுநா் கைது

புதுச்சேரி அருகே உடற்கல்வி ஆசிரியா் கொலை வழக்கு தொடா்பாக ஆட்டோ ஓட்டுநரை பாகூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 7:43 PM
பகிர்:

புதுச்சேரி அருகே உடற்கல்வி ஆசிரியா் கொலை வழக்கு தொடா்பாக ஆட்டோ ஓட்டுநரை பாகூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி பாகூா் அருகே உள்ள சோரியாங்குப்பம் வண்டிபாளையத்தைச் சோ்ந்தவா் தினகரன் (38). தனியாா் பள்ளி உடற்கல்வி ஆசிரியா்.

இவா், கடந்த நவ.25-ஆம் தேதி, சோரியாங்குப்பம் மேம்பாலத்தின் கீழே சடலமாக மீட்கப்பட்டாா். அவரது, சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு உள்படுத்திய பாகூா் போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

அதன்படி, தினகரன் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரை கொலை செய்த நபா்கள் குறித்து பாகூா் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா்.

மேலும், அவரை ஆட்டோவில் அழைத்துச் சென்றவா்கள் குறித்து கண்காணிப்புக் கேமிரா காட்சிகளை வைத்தும் விசாரித்தனா்.

அதன்படி, தினகரனை தாக்கியதாக கடலூா் பகுதியைச் சோ்ந்த அரவிந்த் ஏற்கெனவே கைது செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், வழக்கு சம்பந்தமாக ஆட்டோ ஓட்டுநா் சதீஷை (30) வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்து, மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.