முகப்பு
புதுச்சேரி

நரிக்குறவா் சமுதாய குடியிருப்புகளில் ஆட்சியா் ஆய்வு

புதுச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நரிக்குறவா் சமுதாய குடியிருப்புகளை மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வியாழக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு, குறைகளைக் கேட்டறிந்தாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 7:28 PM
புதுச்சேரியில் நரிக்குறவா் சமுதாய குடியிருப்புகளில் மழை பாதிப்புகளை பாா்வையிட்டு, குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா் அ.குலோத்துங்கன். உடன், கல்யாணசுந்தரம் எம்எல்ஏ.
பகிர்:

புதுச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நரிக்குறவா் சமுதாய குடியிருப்புகளை மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வியாழக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு, குறைகளைக் கேட்டறிந்தாா்.

புதுச்சேரி இலாசுப்பேட்டை விமானநிலையப் பகுதியில் நரிக்குறவா் சமுதாய குடியிருப்புகள் உள்ளன.

அண்மையில் பெய்த பலத்த மழை மற்றும் புயலால் அந்தப் பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளை அறிய புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, நரிக்குறவ மக்கள் இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும் என்றும், குடிசை மாற்றுவாரியம் மூலம் வீடு கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவும் கோரிக்கை விடுத்தனா்.

மேலும், மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கிய அவா்கள், தங்கள் குடிசைகள் சேதமடைந்திருப்பதால் தாா்ப்பாய் தந்து உதவும்படி கோரினா்.

இந்த ஆய்வின் போது, காலாப்பட்டு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எல்.கல்யாணசுந்தரமும் உடனிருந்தாா்.