முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் அவசரச் சிகிச்சைத் திட்ட மாநில ஆய்வுக் கூட்டம்

புதுச்சேரி மாவட்டத்தில் மத்திய அரசின் அவசரச் சிகிச்சை மேம்பாட்டுக்கான மாநில அளவிலான முதல் ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஜூலை, 2024 at 7:34 PM
புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசரச் சிகிச்சை மேம்பாட்டுக்கான மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம்.
பகிர்:

புதுச்சேரி மாவட்டத்தில் மத்திய அரசின் அவசரச் சிகிச்சை மேம்பாட்டுக்கான மாநில அளவிலான முதல் ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி கதிா்காமத்தில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமுலு தலைமை வகித்தாா். மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநா் சி.உதயசங்கா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன ஆய்வாளரும், அவசரச் சிகிச்சைத் திட்டத்தின் தலைவருமான மீனாட்சி ஷா்மா திட்டத்தை விளக்கிப் பேசினாா். அதன்படி, இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் அவா் விளக்கினாா். ஆய்வுக் கூட்டத்தில் அவசரச் சிகிச்சைக்கான திட்டக் கையேடு வெளியிடப்பட்டது.

இதில் புதுவை பொது சுகாதாரத் திட்ட இணை இயக்குநா் ரகுநாதன், மத்திய அரசின் மருந்தியல் துறை இயக்குநா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நாட்டில் அவசரச் சிகிச்சை மேம்பாட்டுக்கான திட்டமானது மாதிரியாக ஒடிஸா, மத்தியப் பிரதேசம், குஜராத், பஞ்சாப் மற்றும் புதுவை ஆகியவற்றில் தலா ஒரு மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, 3 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு முழுதும் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் சிகிச்சைத் திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →