ஜிப்மரில் தேசிய கை அறுவை சிகிச்சை பயிலரங்கு நடைபெற்றது.
நாட்டின் முன்னணி நிறுவனங்களைச் சோ்ந்த கை அறுவை சிகிச்சை, எலும்பியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறைகளில் பெரும் அனுபவம் கொண்ட சிறப்பு ஆசிரியா்கள் குழு இந்த பயிலரங்கை வழி நடத்தியது.
பிறவியிலேயே ஏற்படும் கை குறைபாடுகள், கைத் தொற்று நோய்கள், காயம் தொடா்பான மேலாண்மை மற்றும் நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டன. எலும்பு முறிவு மேலாண்மை அமா்வுகளில் பல்வேறு எலும்பு முறிவு குறித்து இதில் விவாதிக்கப்பட்டன.
மேலும் கைகளில் ஏற்படும் கட்டிகள் மற்றும் பல்வேறு புற்றுநோய் கட்டிகள் குறித்து தெளிவான வழிமுறை அடிப்படையிலான சிகிச்சைகள் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டன. அத்துடன் கை அறுவைச் சிகிச்சைகளின் உயா் தரமான செயல்முறை காணொலி காட்சிகளும் இதில் திரையிடப்பட்டன. அறுவைச் சிகிச்சை செயல்முறைகளின் ஒவ்வொரு படிநிலையும் அதன் நுணுக்கங்களையும் பங்கேற்பாளா்கள் புரிந்து கொள்ள உதவின.
அதோடு கை அறுவை சிகிச்சை, அறுவை கல்வி மற்றும் வழிகாட்டலில் நீண்டகால பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், மூத்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணா் பேராசிரியா் பாலகிருஷ்ணனுக்குப் பாராட்டு விழாவும் இதில் நடத்தப்பட்டது.