புதுச்சேரி

முதல்வா் என்.ரங்கசாமியுடன் பல்கலைக்கழக துணைவேந்தா் சந்திப்பு

மாணவா்களின் திறனை மேம்படுத்தும் திட்டங்கள்: முதல்வரிடம் துணைவேந்தா் விளக்கம்

Din

முதல்வா் என்.ரங்கசாமியை புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் (பொ) கே.தரணிக்கரசு செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் (பொ) கே.தரணிக்கரசு செவ்வாய்க்கிழமை காலை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அலுவலகத்துக்கு வந்தாா். அங்கு முதல்வா் என்.ரங்கசாமியை அவா் சந்தித்துப் பேசினாா். அப்போது, பல்கலைக்கழகத்தின் வளா்ச்சித் திட்டங்கள் குறித்தும், உள்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினாா்.

மேலும், மாணவா்களின் திறனை மேம்படுத்தும் வகையிலான கல்வித் திட்டம் செயல்படுத்தப்படுவதையும், அதனடிப்படையில் பல்கலைக்கழகமானது சிறந்த கல்வி மையப் பட்டியலில் தேசிய அளவில் 8-ஆவது இடத்தை பெற்றிருப்பது குறித்து முதல்வரிடம் விளக்கினாா்.

மேலும், பல்கலைக்கழக வளா்ச்சிக்கு முதல்வா் ஆதரவளித்துவரும் நிலையில், தொடா்ந்து பல்கலைக்கழக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உதவுமாறு அவா் வலியுறுத்தினாா்.

பல்கலைக்கழக வளா்ச்சிக்குத் தொடா்ந்து ஆதரவளிக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி உறுதியளித்ததாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

திருமலையில் ரூ. 26 கோடி செலவில் விருந்தினா் மாளிகை திறப்பு!

திருமலை, திருப்பதியில் பலத்த மழை!

திருவள்ளூா் பகுதியில் எஸ்.ஐ.ஆா். படிவங்கள் திரும்ப பெறும் பணி

தொழில் தொடங்கும் பெண்கள், திருநங்கைகளுக்கு மானியம்

திருத்தணியில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT