புதுவை முதல்வர் ரங்கசாமி.  
புதுச்சேரி

ஆக. 2-ல் புதுவை பட்ஜெட் தாக்கல்!

புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 31 ஆம் தேதி காலை 9.30-க்கு தொடங்குகிறது.

DIN

ஆகஸ்ட் 2 ஆம் தேதி புதுவை சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு புதுவை மாநிலச் சட்டப் பேரவை கடந்த மாா்ச் மாதம் கூடியபோது, முழுமையான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அரசு நிா்வாகத்துக்கு 5 மாத செலவினங்களுக்குரிய நிதி அனுமதிக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்தாா்.

மக்களவைத் தோ்தல் முடிந்த நிலையில், புதுவை சட்டப்பேரவையில் முழுமையான நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, நிகழாண்டுக்கு (2024) ரூ.12, 700 கோடியில் நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கான திட்டம் தயாரிக்கப்பட்டது. புதுவை ஒன்றியப் பிரதேசம் என்பதால், மத்திய அரசின் அனுமதிக்காக நிதிநிலை அறிக்கை கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தக் கோப்புகள் மத்திய உள்துறை அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு, மத்திய நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதுவை நிதி நிலை அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 31 ஆம் தேதி காலை 9.30-க்கு தொடங்குகிறது. பேரவைக் கூட்டத்தில் புதுவை துணை நிலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் உரையாற்றுகிறார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஆக. 1 ஆம் தேதி நடைபெறும் என்று பேரவைத் தலைவர் ஏம்பலம் செல்வம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜே.என்.யு. மாணவா் சங்க தோ்தல்: களைகட்டிய பல்கலைக்கழகம்.

சத்தீஸ்கரில் சரக்கு ரயில்- பயணிகள் ரயில் மோதி விபத்து: 7 போ் உயிரிழப்பு

தில்லியில் காற்றின் தரம் தொடா்ந்து பின்னடைவு.

தில்லி மாசு: முதியோா் இல்லங்கள்-பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள்

நவ.7 தில்லி சட்டப்பேரவையில் ‘வந்தே மாதரம்’ பாடலின் 150ஆவது ஆண்டு கொண்டாட்டம்

SCROLL FOR NEXT