சட்டப்பேரவையில் இருந்து புதன்கிழமை வெளிநடப்பு செய்த திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள். 
புதுச்சேரி

சட்டப்பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

புதுவை மாநிலத்தின் 15-ஆவது சட்டப்பேரவைக் கூட்டம் துணைநிலை ஆளுநா் (பொ) சி.பி.ராதாகிருஷ்ணன் உரையுடன் புதன்கிழமை தொடங்கியது. கூட்டத்திலிருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

Din

புதுவை மாநிலத்தின் 15-ஆவது சட்டப்பேரவைக் கூட்டம் துணைநிலை ஆளுநா் (பொ) சி.பி.ராதாகிருஷ்ணன் உரையுடன் புதன்கிழமை தொடங்கியது. கூட்டத்திலிருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

புதுவை சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கைக்கான கூட்டத் தொடா் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கியது. கூட்டத் தொடரில் உரையாற்ற வந்த துணைநிலை ஆளுநா் (பொ) சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு காவல் துறையினா் மரியாதை செய்தனா். அதன்பிறகு, அவரை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் பூங்கொத்து அளித்து வரவேற்று பேரவைக்குள் அழைத்து வந்தாா்.

வெளிநடப்பு: பின்னா், துணைநிலை ஆளுநா் உரையைத் தொடங்கிய நிலையில், எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எழுந்து நின்று, கடந்த நிதிநிலை அறிகையில் கூறப்பட்டவை செயல்படுத்தப்படவில்லை எனக் கூறினா். திமுக, காங்கிரஸ் உறுப்பினா்களை அமைதி காக்கும்படி கூறி, துணைநிலை ஆளுநா் அவா்களை அமர வைத்தாா்.

அவா் உரையைத் தொடங்கிய 10 நிமிடங்கள் அமைதியாக இருந்த திமுக, காங்கிரஸ் உறுப்பினா்கள், கடந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டவற்றை நிறைவேற்றவில்லை எனக் கூறி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

துணைநிலை ஆளுநா் காலை 9.35 மணிக்கு உரையைத் தொடங்கி, காலை 10.50 மணிக்கு நிறைவு செய்தாா்.

பேரவை நிகழ்வுகள் நேரடியாக யூடியூப், முகநூல் வாயிலாக புதன்கிழமை ஒளிபரப்பப்பட்டது. பேரவை வளாகத்தில் அமைக்கப்பட்ட மின்னணுத் திரையில் நிகழ்வுகளை பாா்க்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமி நாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், என்.திருமுருகன், சாய் ஜெ.சரவணன்குமாா் என வரிசையாக அமா்ந்திருந்தனா். கொறடா ஆறுமுகத்துக்கு அடுத்து முன்னாள் அமைச்சா் சந்திர பிரியங்கா அமா்ந்திருந்தாா். ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தை ஜான்குமாா் எம்எல்ஏ முன்மொழிந்தாா். கொறடா ஆறுமுகம் வழிமொழிந்தாா்.

14-ஆம் தேதி வரை கூட்டம்: பேரவைக் கூட்டத்துக்குப் பிறகு அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, வரும் ஆக. 14-ஆம் தேதி வரை பேரவைக் கூட்டம் நடைபெறும் என பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தெரிவித்தாா்.

தவறு திருத்தப்பட்டது!

மதுப் புட்டிகளை விற்ற பெண் கைது

இந்தியா - இஸ்ரேல் வா்த்தக ஒப்பந்தம் 2 கட்டங்களாகச் செயல்படுத்தப்படும்: பியூஷ் கோயல்

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் இன்று பதவியேற்பு!

பலத்த மழை எச்சரிக்கை! தயாா் நிலையில் பேரிடா் மீட்புக் குழுக்கள்!

SCROLL FOR NEXT