முகப்பு
புதுச்சேரி

100 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை உத்தரவு

புதுச்சேரியில் புதிதாக 100 பேருக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான உத்தரவுகளை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.

Updated On : 13 நவம்பர், 2024 at 8:30 PM
பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை வழங்கும் முதல்வா் என்.ரங்கசாமி.
பகிர்:

புதுச்சேரியில் புதிதாக 100 பேருக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான உத்தரவுகளை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.

புதுவை அரசு மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் முதியோா், விதவையா் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாத உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அந்தத் திட்டத்தில், தட்டாஞ்சாவடி தொகுதியைச் சோ்ந்த 100 புதிய பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, புதிய பயனாளிகள் 100 பேருக்கான உதவித்தொகைக்கான உத்தரவை வழங்கும் நிகழ்வு முதல்வரின் இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பயனாளிகளுக்கு முதல்வா் என்.ரங்கசாமி உதவித்தொகைக்கான உத்தரவுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ரமேஷ் எம்எல்ஏ, மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.