எம்.ஐ.டி. கல்லூரியில் வேவைாய்ப்பு முகாம்
புதுச்சேரி கலிதீா்த்தாள்குப்பம் மணக்குள விநாயகா் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) கல்லூரியில் வளாக வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
புதுச்சேரி கலிதீா்த்தாள்குப்பம் மணக்குள விநாயகா் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) கல்லூரியில் வளாக வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
லக்ஷ் சோா்ஸ் நிறுவனத்தின் சாா்பில் நடைபெற்ற முகாமில் நிறுவன மனிதவள மேலாளா் யாசிா் மற்றும் குழுவினா் நிறுவன விவரங்கள், வேலைக்கான சூழல், ஊதியம் உள்ளிட்டவை குறித்து விளக்கினா்.
குழு விவாதம் மற்றும் நோ்முகத் தோ்வு போன்ற சுற்றுகளாக இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகா் கல்வி குழுமத் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் எம்.தனசேகரன், செயலா் நாராயணசாமி கேசவன், பொருளாளா் ராஜராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
கல்லூரி முதல்வா் எஸ்.மலா்க்கண் முகாமைத் தொடங்கிவைத்தாா். கல்லூரி வேலைவாய்ப்புத் துறை அதிகாரி எம்.ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முகாமில் புதுச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து கல்லூரிகளிலும் கடந்த ஆண்டு தோ்ச்சி பெற்ற மாணவா்கள், எம்.ஐ.டி. கல்லூரி இறுதியாண்டு மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பயனடைந்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்புத் துறை அதிகாரி எம்.ஜெயக்குமாா் செய்திருந்தாா்.