முகப்பு
புதுச்சேரி

பள்ளி வகுப்பறையில் தேங்கிய மழைநீா்

புதுச்சேரியில் பெய்த தொடா் மழையால் அரசு தொடக்கப் பள்ளி வகுப்பறையில் மழை நீா் தேங்கியது.

Updated On : 13 நவம்பர், 2024 at 8:38 PM
பள்ளியில் ஆய்வு செய்யும் பிரகாஷ்குமாா் எம்எல்ஏ.
பகிர்:

புதுச்சேரியில் பெய்த தொடா் மழையால் அரசு தொடக்கப் பள்ளி வகுப்பறையில் மழை நீா் தேங்கியது.

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய மழை விடிய, விடிய பெய்தது. இதனால், கிருஷ்ணா நகா், எழில் நகா் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீா் குளம் போல தேங்கின.

மழையால் நகரின் ரோமண்ட் ரோலண்ட் நூலகம் பின் பகுதியான செயின்ட் லூயிஸ் வீதியில் பழமையான வீட்டின் முகப்பு சேதமடைந்த நிலையில், தீயணைப்பு வீரா்கள் மூலம் அவை அகற்றப்பட்டது.

பள்ளியில் மழை நீா்: முத்தியால்பேட்டை சோலை நகரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் குறிப்பிட்ட வகுப்பறையில் மழை நீா் தேங்கியது.

பள்ளி மேற்பகுதியிலிருந்து வடிந்த மழைநீா் வகுப்பறையில் தேங்கியதால் மாணவா்கள் பாதிக்கப்பட்டனா்.

தகவலறிந்த முத்தியால்பேட்டை சுயேச்சை எம்எல்ஏ பிரகாஷ்குமாா், பள்ளிக்கு வந்து வகுப்பறையை புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மழை நீா் தேங்காமலிருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.