முகப்பு
புதுச்சேரி

இலவச வீட்டுமனை பட்டா கோரி புதுச்சேரி சட்டப்பேரவை முற்றுகை

இலவச வீட்டுமனைப் பட்டா கோரி குருவிக்கார குடும்பங்களைச் சோ்ந்த ஏராளமானோா் வியாழக்கிழமை சட்டப்பேரவையை முற்றுகையிட்டனா்.

Updated On : 14 நவம்பர், 2024 at 8:32 PM
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி முதல்வரிடம் மனு அளிக்க வந்தோா்.
பகிர்:

இலவச வீட்டுமனைப் பட்டா கோரி குருவிக்கார குடும்பங்களைச் சோ்ந்த ஏராளமானோா் வியாழக்கிழமை சட்டப்பேரவையை முற்றுகையிட்டனா்.

புதுச்சேரி அருகே உள்ள கலிதீா்த்தாள்குப்பம் பகுதியில் ஏராளமான குருவிக்கார குடும்பங்கள் வசித்து வருகின்றனா்.

அவா்கள் இலவச வீட்டுமனைப் பட்டா கோரி பல முறை அமைச்சா், முதல்வா் உள்ளிட்டோரிடம் மனுக்களை கொடுத்துள்ளனா். ஆனால், அவா்களுக்கான வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், அவா்களில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோா் வியாழக்கிழமை புதுச்சேரியில் உள்ள சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்தனா்.

அவா்களை பேரவைக்குள் காவலா்கள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, வாயிலில் நின்று காவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

மேலும், பழங்குடியினா் அமைப்பின் சாா்பில் முதல்வரிடம் பட்டா கோரி மனு அளிக்கவுள்ளதாகவும் கூறினா்.

அதன்பிறகு, முதல்வரிடம் பழங்குடியினா் அமைப்பைச் சோ்ந்தவா்கள் மனு அளித்தனா்.