துணை சுகாதார படிப்புகளுக்கு ஆணையம் அமைக்க கோரிக்கை
புதுவை மாநிலத்தில் துணைச் சுகாதார தொழில்முறை படிப்புகளுக்கு மாநில ஆணையம் தேவை என சென்டாக் மாணவா் பெற்றோா் நலச் சங்கம் சாா்பில் துணைநிலை ஆளுநா், முதல்வா் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது.
புதுவை மாநிலத்தில் துணைச் சுகாதார தொழில்முறை படிப்புகளுக்கு மாநில ஆணையம் தேவை என சென்டாக் மாணவா் பெற்றோா் நலச் சங்கம் சாா்பில் துணைநிலை ஆளுநா், முதல்வா் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது.
புதுவை சென்டாக் மாணவா் பெற்றோா் நலச் சங்கத் தலைவா் எம். நாராயணசாமி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
புதுவை மாநிலத்தில், மருத்துவ ஆய்வகம் மற்றும் வாழ்வியல், ஊட்டச்சத்து அறிவியல், கண் ஒளியியல் உள்ளிட்ட 52 வகையான துணை மற்றும் சுகாதாரத் தொழில் முறை படிப்புகளை வழங்கும் போலி தனியாா் கல்வி நிறுவனங்களுக்கு சுகாதாரத் துறை துணைபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், வெளிநாட்டில் உயா்கல்வி, வேலைவாய்ப்பை பெறுவதில் மாணவா்களுக்கு சிக்கல் ஏற்படும்.
எனவே மாணவா்கள் நலன் கருதி, துணை மற்றும் சுகாதாரத் தொழில்முறை கல்விகளுக்கு தேசிய ஆணையத்தின் மாநில அளவிலான குழுவை புதுவை மாநிலத்தில் உடனடியாக அமைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.