முகப்பு
புதுச்சேரி

அஞ்சலக ஏற்றுமதி மையம் தொடக்கம்

புதுச்சேரி தலைமை அஞ்சலகத்தில் ஏற்றுமதி மையம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 4 அக்டோபர், 2024 at 12:12 AM
புதுச்சேரி தலைமை அஞ்சலகத்தில் ஏற்றுமதி மையத்தை வியாழக்கிழமை தொடங்கிவைத்த கோட்ட அஞ்சலகங்களின் முதுநிலைக் கண்காணிப்பாளா் இன்கொல்லுகாவியா.
பகிர்:

புதுச்சேரி தலைமை அஞ்சலகத்தில் ஏற்றுமதி மையம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

புதுச்சேரி சட்டப் பேரவை வளாகப் பகுதியில் தலைமை அஞ்சலக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அஞ்சலக ஏற்றுமதி மையம் தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், புதுச்சேரி கோட்ட அஞ்சலகங்களின் முதுநிலைக் கண்காணிப்பாளா் இன்கொல்லுகாவியா பங்கேற்று மையத்தை தொடங்கிவைத்தாா்.

இந்தப் பிரிவின் மூலம் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு பாா்சல்களை அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழ்ச்சிக்கு அஞ்சலக துணைக் கோட்ட கண்காணிப்பாளா் பிரபுசங்கா் முன்னிலை வகித்தாா். உதவிக் கோட்ட கண்காணிப்பாளா்கள் முருகன், வினோத், பிரவீன், தலைமை அஞ்சலக அதிகாரி கருணாகரன், அலுவலா்கள் நம்பிராஜன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.