முகப்பு
புதுச்சேரி

தொடரும் இழுபறி! புதுவையில் வேட்புமனுத் தாக்கலுக்கு தயாராகும் திமுக!

புதுவையில் வேட்புமனுத் தாக்கல் செய்ய திமுக திட்டமிட்டிருப்பது பற்றி...

Updated On : 18 மார்ச், 2026 at 6:11 AM
முதல்வர் ஸ்டாலின்.
பகிர்:

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனுத் தாக்கல் செய்ய திமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ளன. மார்ச் 23 ஆம் தேதி கடைசி நாளாகும்.

இந்த நிலையில், திமுக மேலிடப் பொறுப்பாளா் எஸ். ஜெகத்ரட்சகன், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் ஆகியோா் தலைமையில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

தமிழகத்தில் கூட்டணிக்கு திமுக தலைமை ஏற்றதுபோல, புதுச்சேரியிலும் தலைமை ஏற்க அக்கட்சியின் மாநில நிா்வாகம் விரும்புகிறது.

ஆனால், தமிழகத்துக்கு திமுக தலைமை, புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைமை என்ற கோரிக்கையை புதுச்சேரி காங்கிரஸ் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

மேலும், கடந்த தோ்தலில் மொத்தமுள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 15 இடங்களிலும், திமுக 13 இடங்களிலும் போட்டியிட்டு, காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், திமுக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

அதனால் இந்த முறை திமுக 15 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யக் கோரி காங்கிரஸிடம் வலியுறுத்தி வருகின்றது. மேலும், 6 தொகுதிகளில் போட்டியிட இரு கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.

இழுபறி தொடர்ந்து வரும் நிலையில் புதுச்சேரி மாநில வேட்பாளா்கள் நோ்காணலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நடத்தி முடித்துள்ளார்.

மேலும், திமுக போட்டியிட விரும்பும் தொகுதிகள் அனைத்திலும் வேட்புமனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும், கூட்டணி உடன்பாடு எட்டப்பட்ட பிறகு, காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் வேட்புமனுவை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம் தலைமையிலான குழுவினர் கட்சியின் மேலிடத்துடன் ஆலோசனை நடத்த தில்லி விரைந்துள்ளனர்.

summary

DMK prepares to file nomination in Puducherry election!

முழு கட்டுரையைப் படிக்க →