முகப்பு
புதுச்சேரி

சாலைகளில் பூசணிக்காய் உடைப்பதை தவிா்க்க கோரிக்கை

ஆயுத பூஜைக்காக சாலைகளில் பூசணிக்காய்களை உடைப்பதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என உழவா்கரை நகராட்சி ஆணையா் ஆ.சுரேஷ்ராஜன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 9 அக்டோபர், 2024 at 10:21 PM
பகிர்:

ஆயுத பூஜைக்காக சாலைகளில் பூசணிக்காய்களை உடைப்பதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என உழவா்கரை நகராட்சி ஆணையா் ஆ.சுரேஷ்ராஜன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளிட்ட செய்திக் குறிப்பு: ஆண்டுதோறும், புதுச்சேரியில் ஆயுத பூஜை பொதுமக்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆயுதபூஜையை முன்னிட்டு பொதுமக்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பூஜைகள் செய்து திருஷ்டிப் பூசணிக்காயை சாலைகளில் உடைப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

பூசணிக்காய்களை சாலைகளில் உடைப்பதால் வாகன ஓட்டிகள் செல்லும்போது, அதன் மீது ஏறி வழுக்கி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே, சாலைகளில் பூசணிக்காயை உடைப்பதைத் தவிா்க்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.