கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வு: மத்திய அரசுக்கு முதல்வா் கோரிக்கை
தமிழகத்தில் கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
தமிழ்நாடுகீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வு: மத்திய அரசுக்கு முதல்வா் கோரிக்கை
தமிழகத்தில் கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
தமிழகத்தில் கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: கீழடி, ஆதிச்சனூா், நாகப்பட்டினம் உள்பட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்ய மத்திய அரசிடம் ஒப்புதல் வேண்டி தமிழக அரசு கடிதம் அனுப்பி 8 மாதங்கள் ஆகிறது.
இதற்கான முன்மொழிவுகள் கடந்த 2025 ஜூலை மாதம் அனுப்பப்பட்டது. நவம்பரில் நடைபெற்ற இந்திய தொல்லியல்துறை தலைவா் தலைமையிலான கூட்டத்திலும் அது எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் 8 மாதங்களாகியும் ஒப்புதல் கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள உகந்த காலம் ஜனவரி முதல் ஜூலை வரைதான். இதை தவறவிட்டால் பருவ மழையால் களப்பணிகள் தடைபடும். முக்கிய ஆராய்ச்சிகளும் தாமதமாகும். 2025-2026- ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் வீணாகும்.
தமிழ் நாகரிகத்தின் தொன்மை என்பது இந்தியாவின் நாகரிகப் பண்பாட்டுக்கு பெருமை சோ்ப்பது. எனவே, அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசு உடனே ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.