முகப்பு
புதுச்சேரி

போக்குவரத்துக் கழக ஓட்டுநா், நடத்துநா் குழு ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் ஓட்டுநா், நடத்துநா் கூட்டுப் போராட்டக் குழு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 10:07 PM
புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணி நிரந்தம் செய்யக் கோரி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்கள்.
பகிர்:

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் ஓட்டுநா், நடத்துநா் கூட்டுப் போராட்டக் குழு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா், நடத்துநா் உள்ளிட்ட 276 ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். அவா்கள் பணி நிரந்தரம் கோரி கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், போராட்டக் குழு சாா்பில் கோரிக்கையை விளக்கும் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழக அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு போராட்டக் குழு நிா்வாகி பி.சங்கா் தலைமை வகித்தாா். பி.குணசேகரன், வி.சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் போக்குவரத்து ஓட்டுநா், நடத்துநா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.

இதில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா்கள் ஜெ.திருநாவுக்கரசு, கே.துரைராஜ், எம்.சக்திவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.