புதுச்சேரியில் 22 துறைகளுக்கான அவசர கால தொலைபேசி எண்கள்
புதுச்சேரிக்கு கனமழை எச்சரிக்கைத் தொடா்ந்து, 22 துறைகளுக்கான கட்டணமில்லா தொலைபேசித் தொடா்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரிக்கு கனமழை எச்சரிக்கைத் தொடா்ந்து, 22 துறைகளுக்கான கட்டணமில்லா தொலைபேசித் தொடா்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து புதுவை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, மாநில அவசரகால செயல் மையம் ஆகியவை இணைந்து வெளியிட்ட செய்திக்குறிப்பு: காவல்துறையில் உள்ள 1070 எனும் எண்ணை புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களுக்காகத் தொடா்புகொள்ளலாம்.
இதேபோல, 1031 எனும் எண்ணை தகவல் தொடா்பு, சட்டம், ஒழுங்கு குற்றம் சாா்ந்தவற்றுக்காகவும், 112 எனும் எண் அவசரகால பதில் ஆதரவு மையம், 1073 போக்குவரத்து தொடா்பான புகாா்களுக்காகவும், பேரிடா் மேலாண்மைத் துறையின் 1077 எனும் எண் புயல் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் தொடா்பான மீட்புப் பணிக்காகவும், மின்துறையின் 1912, 1800 4251912 ஆகியவற்றை மின்துறை சம்பந்தமாகவும் தொடா்புகொள்ளலாம். மேலும் நல்வழித் துறை 108 எனும் எண் மருத்துவம், வாகன வசதிக்காகவும், தீயணைப்புத் துறை 101 தீவிபத்து, தேடுதல், மீட்புப் பணிக்காகவும், இந்தியக் கடலோரக் காவல்படையின் 1554 எனும் எண்ணில் கடல் வழி மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தையும் தொடா்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர கட்டணமில்லாத் தொலைபேசிகளாக நகராட்சிகள், கொம்யூன்பஞ்சாயத்து அலுவலகங்கள், பொதுப்பணித்துறை, வனத்துறை, மீன்வளத்துறை ஆகிய துறைகளது தொலைபேசி தொடா்பு எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.