கிரிக்கெட் வீரா்கள் ஆளுநருடன் சந்திப்பு
புதுச்சேரியில் அரவிந்தரின் 150-ஆவது பிறந்த தினத்தையொட்டி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினா், புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
புதுச்சேரியில் அரவிந்தரின் 150-ஆவது பிறந்த தினத்தையொட்டி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினா், புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் அறக்கட்டளையின் கலாசாரப் பிரிவு சாா்பில், கடந்த ஆகஸ்ட் மாதம் அரவிந்தரின் 150-ஆவது பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில், கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளில் பங்கேற்ற பல அணிகளில் குறிப்பிட்ட அணியினா் வெற்றி பெற்று பரிசுகளைப் பெற்றனா்.
போட்டியில் வென்ற அணியைச் சோ்ந்த வீரா்கள், ஆரோவில் அறக்கட்டளையின் நிா்வாகக் குழு உறுப்பினரும், புதுவை துணைநிலை ஆளுநருமான கே. கைலாஷ்நாதனை, புதுச்சேரியில் உள்ள ராஜ் நிவாஸில் செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
அப்போது, ஆரோவில் சாா்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் முக்கியத்துவத்தையும், அதற்கான பரிசு விவரங்கள் மற்றும் வருங்காலங்களில் நடைபெறவுள்ள போட்டிகள் குறித்தும் ஆளுநரிடம் விளக்கப்பட்டது.
இந்நிகழ்வில், ஆரோவில் அறக்கட்டளை இயக்குநா் கே. ஸ்வா்ணம்பிகா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.