முகப்பு
புதுச்சேரி

போதைப் பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் போதைப் பொருள் தடுப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 6:38 PM
புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.
பகிர்:

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் போதைப் பொருள் தடுப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமை வகித்தாா். காவல் துறை முதுநிலைக் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளா் லட்சுமி சௌசன்யா, துணை ஆட்சியா் அா்ஜூன் ராமகிருஷ்ணன், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் சிவகாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் விவரம்: புதுச்சேரியில் போதைப் பொருள்கள் புழக்கத்தையும், கடத்தல் மற்றும் விற்பனையையும் தடுக்க தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.

போதைப் பொருளுக்கு எதிரான மற்றும் அவற்றினால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணா்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். பள்ளிகள், கல்லூரிகளில் போதை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

கல்வி நிலையங்களில் இருந்து 100 மீட்டா் தொலைவுக்கு சாலையில் மஞ்சள் கோடு வரைந்து, அதற்குள் உள்ள கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்காத வகையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் ஆகிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.