முகப்பு
புதுச்சேரி

அரசுப் பணியாளா்கள் நல கூட்டமைப்பினா் போராட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் அலுவலகத்தை அரசுப் பணியாளா்கள் நல கூட்டமைப்பினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 7:42 PM
புதுச்சேரி பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்ட அரசுப் பணியாளா்கள் நல கூட்டமைப்பினா்.
பகிர்:

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் அலுவலகத்தை அரசுப் பணியாளா்கள் நல கூட்டமைப்பினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் புதுவை மாநிலத்தில் பொதுப் பணித் துறை உள்ளிட்டவற்றில் தினக்கூலிப் பணியாளா்கள் எனப்படும் வவுச்சா் ஊழியா்கள் நியமிக்கப்பட்டனா்.

அவா்கள், பணி நிரந்தரம் மற்றும் ரூ.18 ஆயிரம் மாத ஊதியம் கோரி போராடி வருகின்றனா்.

இதையடுத்து, சட்டப்பேரவையில் அவா்களை பணி நிரந்தரம் செய்யவும், ரூ.18 ஆயிரம் ஊதியம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் அறிவித்தாா். ஆனால், தற்போது வரை அறிவிப்பு செயல்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில், அரசுப் பணியாளா்கள் நல கூட்டமைப்பு சாா்பில், அதன் தலைவா் என்.சரவணன் தலைமையில் ஏராளமானோா், புதுச்சேரி லால்பகதூா் சாஸ்திரி வீதியில் உள்ள பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில், கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.