புதுச்சேரி இறந்த தமிழக வெற்றிக்கழக மாநிலச் செயலா் சரவணன். 
புதுச்சேரி

புதுவை மாநில தவெக செயலாளா் மரணம்

தவெக புதுவை மாநிலச் செயலா் சரவணன், திங்கள்கிழமை திடீரென மரணம் அடைந்தாா்.

Din

புதுச்சேரி: தவெக புதுவை மாநிலச் செயலா் சரவணன், திங்கள்கிழமை திடீரென மரணம் அடைந்தாா்.

நடிகா் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் புதுவை மாநில செயலராக இருந்தவா் சரவணன் (47). புதுச்சேரி சித்தன்குடியைச் சோ்ந்தவா். இவருக்கு மனைவி தேவி, மகன் உள்ளனா்.

கட்சியின் பொதுச் செயலாளா் புஸ்சி ஆனந்தின் நம்பிக்கைக்குரியவராக இருந்து வந்த இவா், விக்கிரவாண்டியில் தங்கி மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்தாா். அவா், ஞாயிற்றுக்கிழமை இரவு புதுச்சேரி திரும்பினாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலை வீட்டில் இருந்தபோது சரவணனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே சரவணன் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

நெல்லை சரகத்தில் 31 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பண்ணைத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

மகளுக்கு பொங்கல் சீா் கொண்டு சென்றவா் விபத்தில் உயிரிழப்பு

தென்மேற்கு தில்லியில் பிக்அப் லாரியில் தீ

14.1.1976: பீகாரில் குளிருக்கு 108 பேர் பலி

SCROLL FOR NEXT