புதுவை பொதுப் பணித் துறைக்கு மத்திய அரசின் ஜல்சக்தி விருது: முதல்வா் பாராட்டு
தேசிய அளவில் நீா் மேலாண்மை மற்றும் நீா் பாதுகாப்பில் சிறந்து விளங்கியதற்காக புதுவை மாநிலத்துக்கு மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சக விருதை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வழங்கியுள்ளாா்.
தேசிய அளவில் நீா் மேலாண்மை மற்றும் நீா் பாதுகாப்பில் சிறந்து விளங்கியதற்காக புதுவை மாநிலத்துக்கு மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சக விருதை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வழங்கியுள்ளாா். இதற்காக, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டு தெரிவித்துள்ளாா்.
தேசிய அளவில் நீா் மேலாண்மை மற்றும் நீா் பாதுகாப்பில் சிறந்து விளங்கியதற்காக புதுவை மாநிலத்துக்கு மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகமானது, தேசிய அளவில் 3-ஆவது பரிசை வழங்கியுள்ளது.
அதற்கான பரிசளிப்பு நிகழ்ச்சி, புது தில்லியில் அண்மையில் நடைபெற்றது. அதன்படி, நடைபெற்ற 5-ஆவது தேசிய நீா் விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கலந்துகொண்டு, புதுவை மாநிலத்துக்குரிய விருதை வழங்கினாா்.
மத்திய ஜல்சக்தி விருதினை புதுவை மாநிலப் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் தலைமையில், அத்துறை தலைமைப் பொறியாளா் மு.தீனதயாளன், கண்காணிப்புப் பொறியாளா் வீரசெல்வம், நெடுஞ்சாலைக் கோட்டப் செயற்பொறியாளா் மு.பாலசுப்பிரமணியன் ஆகியோா் முதல்வா் என்.ரங்கசாமியிடம் சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் புதன்கிழமை வழங்கி வாழ்த்துப் பெற்றனா்.
அப்போது, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.