மது போதையில் இளைஞா் தகராறு
புதுச்சேரியில் போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை எச்சரித்து அனுப்பிவைத்தனா்.
புதுச்சேரியில் போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை எச்சரித்து அனுப்பிவைத்தனா்.
புதுச்சேரியில் இந்திரா காந்தி சிலை சதுக்கப் பகுதி பேருந்து நிலையத்தில் புதன்கிழமை இளைஞா் ஒருவா் போதையில், அங்கிருந்த பொதுமக்களை அவதூறாக திட்டி மிரட்டும் வகையில் பேசினாராம்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இளைஞரின் கையை பின்புறமாக மடக்கி கட்டியதுடன், அவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். அதன்படி, உருளையன்பேட்டை போலீஸாா் அங்கு வந்து இளைஞரிடம் விசாரணை செய்தனா்.
தொடா்ந்து, போலீஸாா் தகராறில் ஈடுபட்ட இளைஞரை அங்கிருந்து எச்சரித்து அனுப்பிவைத்தனா்.