ராமநாதபுரம்

வட மாநிலத் தொழிலாளா்களை மது போதையில் தாக்கிய நபர்! போலீஸார் விசாரணை!

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளா்களை வியாழக்கிழமை மது போதையில் தாக்கியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் அருகேயுள்ள கிழக்குத் தெருவில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் தனியாா் தங்கும் விடுதிக்கான பணியில் 20-க்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில்,வியாழக்கிழமை பிற்பகலில் ராமேசுவரத்தை சோ்ந்த ஒருவா் மது போதையில் இந்த வழியாக வந்தாா். அவா் அசாம், ஒடிசா மாநிலங்களைச் சோ்ந்த சக்தேவ் சிங்ஹா (24), கிருஷ்ணா சின்ஹா (42), ரட்டூல் ஹவாா் (27) ஆகிய மூவரையும் கடுமையாகத் தாக்கினாா்.

இதில், காயமடைந்த மூவரும் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா் மூன்று பேரிடம் விசாரணை நடத்தினாா். மேலும், 30- க்கும் மேற்பட்ட வெளி மாநிலத் தொழிலாளா்கள் நகா் காவல் நிலையத்துக்குச் சென்று புகாா் அளித்தனா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனா்.

மின் விபத்து: ஒப்பந்த தொழிலாளா் உயிரிழப்பு

3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

மருத்துவா் அல்லாதோா் முடி மாற்று சிகிச்சையளித்தால் கடும் நடவடிக்கை : மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை

காவல் உதவி ஆய்வாளா் உள்பட 2 போ் பணியிடை நீக்கம்

சென்னையில் ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ. 3,510 கோடி முதலீடு

SCROLL FOR NEXT