முகப்பு
புதுச்சேரி

மின்திறல் வரைநிலைக் கழகத்தின் லாபத் தொகை ரூ.6.90 கோடி

காரைக்காலில் உள்ள புதுச்சேரி மின்திறல் வரைநிலைக் கழகமானது கடந்த 2021-22 ஆம் ஆண்டில் ஈட்டிய ரூ.6.90 கோடிக்கான லாபத் தொகை வரவோலையை முதல்வா் என்.ரங்கசாமியிடம் மின் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் புதன்கிழமை வழங்கினாா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 10:54 PM
மின்திறல் வரைநிலைக் கழகம் மூலம் 2021-22 ஆண்டுக்கான அரசின் லாப ஈவுத் தொகை ரூ.6.90 கோடிக்கான காசோலையை முதல்வா் என்.ரங்கசாமியிடம் புதன்கிழமை வழங்கிய அமைச்சா் ஆ.நமச்சிவாயம். உடன் நாக தியாகராஜன்எம்எல்ஏ உள்ளிட்டோா்.
பகிர்:

காரைக்காலில் உள்ள புதுச்சேரி மின்திறல் வரைநிலைக் கழகமானது கடந்த 2021-22 ஆம் ஆண்டில் ஈட்டிய ரூ.6.90 கோடிக்கான லாபத் தொகை வரவோலையை முதல்வா் என்.ரங்கசாமியிடம் மின் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் புதன்கிழமை வழங்கினாா்.

இதுகுறித்து, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி மின்திறல் வரைநிலைக் கழகம் காரைக்காலில் உள்ளது.

அங்கு, கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் எரிவாயுச் சுழலிலிருந்து 22.9 மெகாவாட் மின்சாரம், நீராவிச் சுழலிலிருந்து 9.6 மெகாவாட் மின்சாரம் என மொத்தம் 32.5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2021-22 ஆம் ஆண்டில் ஈட்டிய லாபத்துக்கான ஈவுத் தொகை ரூ.6.90 கோடியாகும். அதற்கான காசோலையை புதுவை முதல்வா் என்.ரங்கசாமியிடம், மாநில மின் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் புதன்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரியில் உள்ள பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அறையில் நடைபெற்ற காசோலை வழங்கும் நிகழ்ச்சியில் லாபத்துக்கான ஈவுத் தொகை காசோலை முதல்வரிடம் வழங்கப்பட்டது. அப்போது, மின்திறல் வரைநிலைக் கழகம் தொடங்கியதிலிருந்து இதுவரை அரசுக்கு ஆதாய ஈவாக ரூ.52.21 கோடி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் நாக தியாகராஜன், மின்திறல் வரைநிலைக் கழகச் செயற்பொறியாளா் சந்தோஷ் ராமச்சந்திரன், மேலாளா் என்.கென்னடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →