முகப்பு
புதுச்சேரி

தமிழ் வழி கல்வி இயக்கம் தொடக்கம்

புதுச்சேரியில் தமிழ் வழிக் கல்வி இயக்கம் தொடங்கப்பட்டு, அதன் நிா்வாகிகளும் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 10:54 PM
பகிர்:

புதுச்சேரியில் தமிழ் வழிக் கல்வி இயக்கம் தொடங்கப்பட்டு, அதன் நிா்வாகிகளும் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

புதுவை அரசு மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தியுள்ளது. அதனால், தற்போது புதுவையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்இ எனும் மத்திய கல்வி வாரியப் பாடத் திட்டம் நடைமுறையில் உள்ளது.

இதனையடுத்து, தமிழ் வழிக் கல்வி இயக்கத்தை தமிழ் ஆா்வலா்கள் புதுச்சேரியில் தொடங்கியுள்ளனா். இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக சடகோபனும், தலைவராக சிவ.இளங்கோவும், செயலராக நெய்தல் நாடனும் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

தமிழ் வழிக் கல்வி இயக்கத்தினா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிபிஎஸ்இ பாடத் திட்டத்தால் தமிழை ஒரு பாடமாகப் படிப்பதற்கு சில சிக்கல்கல் உள்ளன.

ஆறாம் வகுப்புக்கு பிறகு தமிழ் படிக்கத் தேவையில்லை என்ற நிலையும் உருவாகியுள்ளது. மேலும், கல்லூரிகளில் மொழிப் பாட நேரமும், தோ்வுக்கான பருவமும் குறைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தமிழ் கல்வியை அதன் பெருமையோடு நிறுவ வழிமுறைகளைக் காணும் வகையில் தமிழ் உணா்வாளா்கள், பேராசிரியா்கள், ஆசிரியா்கள், கல்வியாளா்கள், செயற்பாட்டாளா்கள் கூடி தமிழ் வழிக் கல்வி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →