மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்கள் அளிப்பு
புதுவை அரசின் சமூக நலத் துறை மூலம், வில்லியனூா் தொகுதியை சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுவை அரசின் சமூக நலத் துறை மூலம், வில்லியனூா் தொகுதியை சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினரும், புதுவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை வழங்கினாா்.
இதில், சமூக நலத் துறை துணை இயக்குநா் ஆறுமுகம், அலுவலக அதிகாரிகள் அன்பரசன், சுருதி மற்றும் வில்லியனூா் தொகுதி திமுக செயலா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.