முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் செப்.16-இல் பொதுமக்கள் குறைதீா் முகாம்

புதுச்சேரி ஆட்சியா் அலுவலகத்தில் செப்.16-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 13 செப்டம்பர், 2024 at 12:19 AM
பகிர்:

புதுச்சேரி ஆட்சியா் அலுவலகத்தில் செப்.16-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உத்தரவின்படி, புதுச்சேரியில் ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, செப்.15-ஆம் தேதி விடுமுறை நாளாக இருப்பதால், அடுத்த அலுவலக நாள்களில் இந்த குறைதீா் முகாம் நடைபெறும்.

எனவே, நிகழ் மாதத்துக்கான பொதுமக்கள் குறை தீா் தினம் வரும் செப்.16-ஆம் தேதி காலை 10 மணிக்கு வழுதாவூா் சாலையிலுள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் தரைத் தளத்தில் நடைபெறவுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →