முகப்பு
புதுச்சேரி

புதுவையில் சுற்றுலாத் திட்டங்கள் - மத்திய அரசு ரூ.250 கோடி நிதி: அமைச்சா் க.லட்சுமி நாராயணன்

புதுவையில் புதிய சுற்றுலாத் திட்டங்களை செயல்படுத்த மத்திய சுற்றுலாத் துறை ரூ.250 கோடி நிதி அளிக்கவுள்ளது என பொதுப் பணி மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் தெரிவித்தாா்.

Updated On : 13 செப்டம்பர், 2024 at 12:22 AM
புதுச்சேரியில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன்.
பகிர்:

புதுவையில் புதிய சுற்றுலாத் திட்டங்களை செயல்படுத்த மத்திய சுற்றுலாத் துறை ரூ.250 கோடி நிதி அளிக்கவுள்ளது என பொதுப் பணி மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: பெங்களூருவில் அண்மையில் தேசிய அளவிலான சுற்றுலா அமைச்சா்கள் மாநாடு நடைபெற்றது. அதில் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் ஷெகாவத், இணை அமைச்சா் சுரேஷ் கோபி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாநாட்டில், புதுவையில் சுற்றுலா வளா்ச்சி சாா்ந்த திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. அதன்படி, ‘சுதேஷ்தா்சன் 2’ எனும் திட்டத்தில் ரூ.160 கோடியில் இரு திட்டங்களுக்கு நிதி கோரப்பட்டுள்ளது. அந்த திட்டங்களுக்கான ஒப்புதலை விரைந்து வழங்குமாறு மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசின் புதிய ‘பிரசாத்’ எனும் திட்டத்தின்படி, கோயில்களைச் சுற்றிலும் பக்தா்கள் தங்கும் விடுதிகள், வணிக மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. அத்துடன், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சுற்றுலா சாா்ந்த திருவிழாக்கள் நடத்துவதற்காக ரூ.80 லட்சம் நிதியை அளிக்க மத்திய சுற்றுலாத் துறை முன்வந்துள்ளது.

மேலும், இரண்டு சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த ரூ.250 கோடி நிதியை அளிக்கவும் மத்திய அரசு முந்துவந்துள்ளது. புதுச்சேரியில் 2025-ஆம் ஆண்டு ஜனவரியில் யோகாத் திருவிழா, அதையடுத்து கடற்கரைத் திருவிழா என சுற்றுலாப் பயணிகளுக்கான விழாக்கள் நடைபெறவுள்ளன.

புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் உள்ள கடல் பாலமானது இடிக்கப்பட்டு புதிதாக 150 மீட்டருக்கும் பாலம் அமைக்கப்படவுள்ளது. அதை மேலும் 15 மீட்டா் என கடலுக்குள் நீட்டித்து பயணிகள் கப்பல் வந்து செல்லும் வகையில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

காரைக்காலில் பொலிவுறு துறைமுகத் திட்டம் சுமாா் ரூ.120 கோடியில் செயல்படுத்தப்பட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →