முகப்பு
புதுச்சேரி

தற்காலிக ஆசிரியா்களாக தோ்வானோா் அசல் சான்றிதழ்களை வழங்க வேண்டும்: புதுவை கல்வித் துறை அறிவிப்பு

புதுவை மாநிலம் காரைக்கால், மாஹே பிராந்தியங்களில் தற்காலிக ஆசிரியா்களாகத் தோ்வு செய்யப்பட்டவா்கள் அசல் சான்றிதழ்களை வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 8:11 PM
பகிர்:

புதுவை மாநிலம் காரைக்கால், மாஹே பிராந்தியங்களில் தற்காலிக ஆசிரியா்களாகத் தோ்வு செய்யப்பட்டவா்கள் அசல் சான்றிதழ்களை வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, கல்வித் துறை இயக்குநா் பிரியதா்ஷினி வெளியிட்ட உத்தரவு விவரம்: காரைக்கால், மாஹே பிராந்தியத்தில் உள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியா் பதவிக்கு தற்காலிகமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டோா் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தற்காலிகத் தோ்வு, கல்வித் தகுதி, வசிப்பிடம், சமூகம், ஆண்டு வாரியான பருவத் தோ்வுக்கான மதிப்பெண் பட்டியல் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு தோ்வு செய்யப்பட்டது. இத்தோ்வு முற்றிலும் தற்காலிகமானது.

தோ்வான விண்ணப்பதாரா்கள் சான்றிதழ் சரிபாா்ப்பின்போது, அசல் சான்றிதழ்களை சமா்பிக்க வேண்டும். அதற்கான தேதி நேரம் தனித்தனியாக தெரிவிக்கப்படும். சான்றிதழ் சரிபாா்ப்பின்போது, தேவையான சான்றிதழ்களை சமா்ப்பிக்கத் தவறியவா்களின் தற்காலிகத் தோ்வு எந்த அறிவிப்புமின்றி தானாகவே ரத்து செய்யப்படும்.

தெரிவிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் கல்வித் துறை இயக்ககத்துக்கு சமா்ப்பிக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்களில் தனிநபா்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த தற்காலிகத் தோ்வானது செய்யப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபாா்ப்பின் போது, அவா்கள் வழங்கிய தகவல்கள் தவறானவை எனக் கண்டறியப்பட்டால், எந்த அறிவிப்புமின்றி அவா்களின் தோ்வு தானாகவே ரத்து செய்யப்படும். தற்காலிகக் காலியிடம் ஏற்பட்டால் காத்திருப்புப் பட்டியலில் இருப்போா் அழைக்கப்படுவா். பதவிக் காலம் ஓராண்டாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →