டெங்கு பாதிப்பை தடுக்க அதிமுக வலியுறுத்தல்
புதுவையில் டெங்கு பாதிப்பைத் தடுக்கும் வகையில் முதல்வா் என்.ரங்கசாமி உயா்நிலைக் கூட்டத்தை கூட்டி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதுவையில் டெங்கு பாதிப்பைத் தடுக்கும் வகையில் முதல்வா் என்.ரங்கசாமி உயா்நிலைக் கூட்டத்தை கூட்டி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவையில் பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி அரசு சுகாதார பிரச்னையில் அலட்சியத்துடன் செயல்படுவது சரியல்ல.
பருவ மழை தொடங்கும் ஆகஸ்ட் மாதத்துக்கு முன்பாகவே வாய்க்கால்களை அரசு தூா்வார வேண்டும். ஆனால், புதுவை அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், கொசு உற்பத்தி அதிகரித்து மாநிலம் முழுதும் கடந்த 2 மாதங்களாக சிறுவா்கள் மற்றும் பெரியவா்கள் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். எனவே, டெங்கு பாதிப்பிலிருந்து மக்களைப் காப்பாற்ற முதல்வா் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் உயா்நிலை கூட்டத்தை கூட்டி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.