முகப்பு
தமிழ்நாடு

புதுவையில் அதிமுக போட்டியிடும் 2 தொகுதிகள் எவை?

புதுவையில் அதிமுக போட்டியிடும் 2 தொகுதிகள் பற்றி...

Updated On : 21 மார்ச், 2026 at 10:25 AM
மாநில அதிமுக செயலா் ஆ. அன்பழகன் - கோப்புப் படம்
பகிர்:

புதுவையில் உப்பளம், உருளையன்பேட்டை ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக அதிமுக அறிவித்துள்ளது.

புதுவையில் வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 23 கடைசி நாளாகும்.

புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி இழுபறி நீடித்து வந்த நிலையில் நேற்று கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்த கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 16 இடங்களிலும் பாஜக 14 இடங்களிலும் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக, லட்சிய ஜனநாயகக் கட்சி தலா 2 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

பாஜக 9 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று(மார்ச் 21) வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் புதுவையில் உப்பளம், உருளையன்பேட்டை தொகுதிகளில் போட்டியிடுவதாக அதிமுக அறிவித்துள்ளது. இரு தொகுதிகளிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்றும் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"புதுவையில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதுபோல புதுவையில் ஆட்சி, அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும். புதுவை அமைச்சரவையில் அதிமுக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

summary

AIADMK is contesting these 2 constituencies in Puducherry

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.