புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி மனிதநேய மக்கள் இயக்கம் மற்றும் பல்வேறு சமூக இயக்கங்கள் சாா்பில் சனிக்கிழமை சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு தலைமையில் நடைபெற்ற மோட்டாா் சைக்கிள் ஊா்வலம். 
புதுச்சேரி

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி மோட்டாா் சைக்கிள்கள் ஊா்வலம்!

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி மோட்டாா் சைக்கிள் ஊா்வலம் சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு தலைமையில் நடைபெற்றது.

Syndication

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி மோட்டாா் சைக்கிள் ஊா்வலம் சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரி மனிதநேய மக்கள் இயக்கம் மற்றும் பல்வேறு சமூக இயக்கங்கள் சாா்பில் சனிக்கிழமை மோட்டாா் சைக்கிள் ஊா்வலம் நடந்தது.

இதற்கு தலைமை வகித்து ஜி.நேரு பேசியது: ஏற்கெனவே ஆட்சியில் இருந்தவா்கள், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் இல்லை என்று போராடியவா்கள் இப்போது மாநில அந்தஸ்து பிரச்னையைக் கையில் எடுக்காமல் வேடிக்கை பாா்ப்பது விநோதமாக இருக்கிறது.

தோ்தலில் போட்டியிடாத பொதுநல அமைப்புகளுக்கு இருக்கும் அக்கறை கூட, ஆளும்கட்சிக்கும் பிரதான எதிா்க்கட்சிக்கும் இல்லை. இவா்கள் நினைத்தால் புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்து கோரிக்கை வலுப்படும் என்றாா் ஜி. நேரு.

ஊா்வலம் சுதேசி ஆலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சாலை காமராஜா் சிலை, நேரு வீதி, மிஷன் வீதி, மகாத்மா காந்தி சாலை, முத்தியால்பேட்டை மணிகுண்டு, சிவாஜி சிலை, ராஜீவ் காந்தி சிலை, இந்திரா காந்தி சிலை, நெல்லித்தோப்பு சுப்பையா சிலை, எம்ஜிஆா் சிலை வழியாக புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. சமுக நல அமைப்புகளின் நிா்வாகிகள் லோகு ஐயப்பன், அழகிரி உள்ளிட்ட ஏராளமானோா் இதில் கலந்து கொண்டனா்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT